கழகம் - கொள்கைகள்

சமத்துவ மக்கள் கழகம்(SMK) கொள்கையும் குறிக்கோளும்

கழகத்தின் நோக்கம்.

பெருந்தலைவர் ஐயா காமராஜரின் கனவை நினைவாக்கிட என்னுடைய மனதில் உதித்தது தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்(SMK). தனக்கென வாழாது, பிறருக்கென வாழ்ந்த ஐயா காமராஜர் அவர்களின் பாதசுவடுகளை பின்பற்றிட ஆரம்பிக்கப்பட்டது சமத்துவ மக்கள் கழகம்(SMK). இன்று ச.ம.க. என்ற விதையை விதைத்துள்ளோம், நிச்சயமாக எதிர் காலத்தில் வளர்ந்து நல்ல பலன்களை இந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கும்.

கட்சி அமைப்பின் மூலம் 234 தொகுதிகளிலும் மக்கள் ஆதரவை பெற்றுள்ள  மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,  மாவட்ட செயலாளர்கள்  மேலும் நமது கழக நிர்வாகிகள் மக்களுக்கு சேவை செய்கின்ற போர் வீரர்களாக இருப்பார்கள். ஏழை, எளிய மக்கள் வாழ்வு உயர வேண்டும், ஊழல் ஒழிய வேண்டும், ஆதிக்க சக்திகள் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும்  என்ற நோக்கத்துடன் கழகத்தின் நிர்வாகிகள் செயல்படுவார்கள்.

கழகம் கொள்கை:

உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் இந்த கழகத்தின் தாரக மந்திரமான கொள்கை ஆகும். எவன் ஒருவனுக்கு இந்த மூன்றும் இருக்கிறதோ அவனே தலைவனாக முடியும். (Truth, Task, Triumph) அதாவது 3T என்பதாகும். எங்கும் எதிலும் உண்மையாக இரு, கடின உழைப்பை மூலதனமாக கொள், வாழ்க்கையில் உயர்வும் வெற்றியும் நிச்சயம் உண்டாகும். இந்த தமிழகத்தின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு உண்டு என்பதை உணர வைப்பது இந்த கழகத்தின் நோக்கம் . அது போல தொலை நோக்கு பார்வையில் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் நடத்தி செல்வதும் இயற்கை, விவசாயம், நீர்நிலைகளை பாதுகாக்க மக்களுக்காக பாடுபடுவதும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பாடுபடுவதும் ஜனநாயகம், சகோதரத்துவம், சமதர்மம், தளைத்திட பாடுபடுவதும், கல்வி விலை போகாமல் தடுத்து அனைவருக்கும் கல்வி கிடைத்திட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கனவை நிறைவேற்றுவதும் எங்கள் கழகத்தின் நோக்கம்.

  • தீவிரவாதம், வன்முறை தடுத்தல்.
  • ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு.
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது முழு நம்பிக்கையும், விசுவாசமும் வைத்து, சமூக உடமை, மதச்சார்பின்மை, வலுவான ஜனநாயகம், ஆகிய குறிக்கோள்களுடன், இந்திய தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றை காக்கும் கடமை உணர்வுடன் கழகம் செயல்படும்.

  • சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் என்னும் குறுகிய மனப்பான்னையுடன் தேசத்தின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பிளவு படுத்தும் எந்த ஒரு சிந்தனைக்கும், செயலுக்கும் சமத்துவ மக்கள் கழகம்(SMK) எதிர்ப்பு தெரிவிக்கும்.

  • பெருமைவாய்ந்த தமிழினத்தின் பண்பாடு,கலை, மற்றும் கலாச்சார மரபுகளைப் பேணிக்காப்பதில் முன்னுரிமை.

  • உலக அரங்கில் தமிழ் மொழியின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த பணியாற்றுதல்.

  • சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு முறை, மாறி வரும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அனைத்து பிரிவின ஏழை, எளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் “பொருளாதாரத்துடன் இணைந்த சமூகநீதி” கொள்கை உருவாக்கி செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கழகத்தின் கொடி:

கழகத்தின் கொடி சிவப்பு,மஞ்சள், வெள்ளை நிறங்களை உள்ளடக்கியதாகும். மேலே சிவப்பு நிறம் பலத்தையும், மஞ்சள் நிறம் தியாகத்தையும், வெள்ளை நிறம் இரக்கத்தையும் வெளிப்படுத்தகூடியதாகும்.